பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 77

கிடக்கும் போது தற்செயலாய் அவ்வழியே வந்த அரச னொருவன் அவரை நோக்கி இவர் பிழைத்தெழுந்ததும் என் நாடு முழுமையும் பெற்றுக் கொள்ளலாம் என்று நாட்டையே கொடுப்பதாகக் கூறினாலும் பிழைப்பாரா? எனவே, ஆபத்தில் செய்த உதவி அணுவளவு என்றாலும் அது அண்டத்தினும் பெரிது எனக் கொண்டு போற்ற வேண்டும்.

உலகில் பல மக்கள் ஒருவர்க்கொருவர் உதவுவது பண்டமாற்று வாணிகம் போலவே உள்ளது. சில செல்வர்கள் தம் வீட்டிற்கு ஏழைகள் வந்தால் பாராமுக மாயிருந்து, தம்மையொத்த செல்வர்கள் வந்தால் போற்றிப் பேணுகின்றனர். ஏன்? தாம் செய்வதுபோல் திருப்பித் தமக்குச் செய்ய ஏழைகளால் முடியாது; செல்வராலே முடியும் என்ற காரணத்தினாலன்றோ? மற்றும் பெரும் பாலான மக்களும் பதிலுதவி செய்யக் கூடியவர்க்கே உதவுவதைக் காண்கின்றோம். எனவே, இதனைக் கம்பு தந்து கேழ்வரகு மாற்றிக் கொள்ளும் பண்டமாற்று வாணிகத்தோடு ஒப்பிடுவதில் என்ன தவறு? சிலர் பதிலுதவியை எதிர்பார்க்காவிடினும், பிறர் தம்மைப் பெருமைப்படுத்திப் புகழ்வதற்காகவும் உதவுவது உண்டு. இதற்குத்தான் அறநிலை வாணிகம் என்று பெயராம். அதாவது அறத்தை புண்ணியத்தை - புகழை - விலைப் பொருள் தந்து பெறும் வாணிகமாகும். இஃதும் அத் துணைச் சிறந்ததன்று. எனவே, எந்தப் பயனையும் எதிர்பார்க்காது செய்யும் உதவி கடலினும் சிறந்ததாம். ஆகவே, உதவி செய்பவர் கைம்மாறு கருதாது காலத்தில்