பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வள்ளுவ்ர் இல்லம்

செய்ய வேண்டும். உதவி பெறுபவர் அதனை மறக்கக் கூடாது.

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது”. ‘காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது’. “பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்

கன்மை கடலிற் பெரிது’.

தன்னிடத்துள்ள நீரை ஆவியாக மாற்றி மேகமாக்கி உலகிற்குப் பயனளித்து மீண்டும் மழையின் மூலமாகவும் ஆற்றின் வாயிலாகவும் அந்நீரைத் தன்னிடத்தே பெற்றுக் கொள்கின்ற கடலைக் காட்டிலும் இக்கைம்மாறு கருதாத உதவியே சாலச் சிறந்தது என்று அறிவித்து, இலக்கியச் சுவை நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கக் செய்த திருவள்ளுவர் திறமைக்கு நாமென்ன கைம்மாறு செய்ய முடியும்: அவரும் நம்மிடத்துக் கைம்மாறு ஒன்றும் கருதவில்லை யன்றோ?

ஒருவர் தினையளவு சிறிய உதவி செய்தாலும் அச்சிற்றுதவியைப் பல மடங்கு பெரிய பனை யளவாக எண்ணிக் கொண்டாட வேண்டும். தினையின் சிறுமை எங்கே பனையின் பெருமை எங்கே! தினையளவு நன்றியைப் பனையளவாகக் கருதுபவர் ஒருவர் உள ரென்றால், அவர் அதன் பயனை மிக மிக உய்த்துணர்ந் துள்ளார் என்பது விளங்கும்.

எடுத்துக்காட்டாக: பயன் அளவில் சிறு பாம்பு ஒன்றைச் சிங்கத்தினும் சிறிதாக நாம் கருத முடியுமா?