பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வள்ளுவர் கண்ட அரசியல் போகும். இல்லே என்றுரையாமனம் உடையவர் தம்மால் உள்ள பொருளே ஒளிக்கும் கோயினைப் பெரு தவர் என்க. இவர்கள் தம்மிடம் வந்து யாசித்தவர் வறுமை தீர்ந்து இனி வேறு எவரிடமும் சென்று யாசியாதவாறு செய்துவிடுவர். அதாவது அவ்வளவு பெரும் பொருளை ஈவர் என்பதாம். இப்பண்புடையவர் தம்பால் வந்து கேட்டவரை ஒருவித இழி சொல்லாலும் இழித்து உரைக்க மாட் டார். இப்படிப்பட்டவரை யாசகர் கண்டபோது உள்ளம் மகிழ்வர். இவர்கள் இனியமொழி கூறுவர். அவர்களை நன்கும் மதிப்பர். இப்படிச் செய்தால் யாசகர்கட்கு வறுமைத் துன்பம் வருமா : மகிழ்வு தானேவரும் அம்மகிழ்வு தம் மெய், வாய்,கண்,மூக்கு, செவி ஆகிய ஜம்புலன்களும் ஆரஅனுபவிக்கும் பொருள் களேப் பெறுவதனால் அன்ருே வருகிறது ? வறுமை யுடையவர் அறிவுடையராயின் தம் வறுமையைத் திர்க் காது இழி சொல் சொல்பவரை நாடார். நாடுவராயின், 'கம்மாலே யாவரிங் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும் தம்மாலாம் ஆக்கம் இலர்என்று-தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும் தெருண்ட அறிவி னவர்' என்று நாலடியார் கூருதன்ருே? யாசகரை இகழ்ந்து உரையாது வாழ்தலே சிறப்பு என்றது, ' எளியர் இவர் என்று இகழ்ந்துரையாராகி, ஒளிபட வாழ்தல் இனிது” என இனியவை காற்பதும் கூறுகிறது. இங்ங் னம் எள்ளாது ஈந்தவர், மானக்கஞ்சாறர் ஆவர். மானக்கஞ்சாறர் தம் திருமகள் கூந்தலைக் களைந்து, யாசகர்க்கு ஈந்தார்,