பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாவச்சம் 99 ' கண்ணில் சிறந்தார் தம்மிடத்தும் காழ்த்த மானம் பண்ணற் குரிய அறங்குறித்தும் படர்ந்தொன் றிரவார் பெருமையினுல் என்று கூறுவதையும் உணரவேண்டும். ' கான் எப்படி யாசிக்காமல் இருப்பேன்; யாசிக் கும்படிதானே என் தலையில் எழுதிப் பிரமன் படைத் ட்டான்' என்று ஒருவன் கூறுவாயிைன், அப்படி வாழ வேண்டுமென்று படைத்த பிரமன் யாசகனைப் போலப் பல இடங்களில் திரிந்து அழிவாளுக. பிரமன் படைப்பில், கருவோடே உயிர்களுக்கு வாழ்நாளும் அதற்கு வேண்டிய உண்டியும், அதற்குக் காரண மான செய் தொழிலும் முன்னே விதிப்பயனுல் உண் டாக்குகின்ருன். அவற்ருேடு யாசித்தலேயும் சேர்த் துப் படைப்பின் அவன் கெட்டே போகவேண்டும். பொருள் இல்லையானுல் யாசிக்கலாமா ? இறந்து விடுதலே நல்லது. வறுமையால் துன்பம் வந்தால் அத் துன்பத்தைத் தீர்க்கும் வழியை முயன்று காண வேண்டும். இவ்வாறு இன்றி வறுமையை இரந்து உண்டு ஒழிப்பேன்" என்று கூறுதல் அறிவீனமாகும். முரட்டுத்தனமும் ஆகும். வறுமையால் இரத்துண்ப தால் வரும் இழிவைத் தீர்க்கவே முடியாது. மலிேயை வேண்டுமானல் மயிரில் கட்டலாம். கடுகைத்துகளத்து ஏழுகடலேயும் அடைக்கலாம். ஆனால், அனுபவிக் கக்கூடிய பொருள் இன்மையால் வறுமையால் வாடி லுைம், பிறர் இடத்தில் சென்று இரத்தல் கூடாது. இவ்வாறு இரவாத தன்மைக்கு, உலகம் கொள்ளாத பெருமை உடைத்து. உரவோர் என்கை இரவா