பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை, மீனம்பாக்கம் அகர்சந்து மான்மல்ஜெயின்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் வித்துவான். எஸ். வி.வரதராஜ ஐயங்கார், M.A., M.O.L., எழுதியது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் காற். பொருளேயும் அழியா மரபினதாக நின்று விளக்கும் ஒப்புயர்வற்ற நூல் திருக்குறளாகும். இதிலுள்ள ஒவ் வாரு குறட்பாவும் ஒவ்வொரு சூத்திரமாக அமைந்து பேருண்மைகளை நெறிப்படுத்தியுரைப்பதால்,'ஆரியம் வேதமுடைத்து, தமிழ் திருவள்ளுவர்ை ஒது குறட்பா வுடைத்து ' என்று போற்றினர் ஆன்ருேர். இக் நூலின் கண் பொதிந்துள்ள அரிய கருத்துக்களைத் தெரிய விளக்கியுள்ள உரையாசிரியர்கள் பேரருளாள ரான பரிமேலழகரும் ஏனைய ஒன்பதின்மருமாவர். இந்திய மொழிகள் பலவற்றிலுமேயன்றி, அயல் காட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ள பெருமை இத்திருக்குறள் ஒன்றிற்கே யுண்டு. எனது அரிய நண்பரும் புதுக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவருமாகிய வித்துவான் உயர்திரு. பாலுார் கண்ணப்ப முதலியாரவர்கள் இயற்றியுள்ள வள்ளுவர் கண்ட அரசியல் ' என்னும் முப்பகுதியாக வெளிவர இருக்கும் நூல்களில் முதலது நாடும் மக்களும்’ என்னும் பொருள்பற்றிய இது. நண்பரவர்கள் தாம் மேற்கொண்ட பொருளைத் திறம்படத் தொகுத்து விளக்கும் முறையும், ஆங்காங்கே மேற்கோள்களே எடுத்தாளும் திறனும் மிகவும் போற்றற்கு உரியன. கற்பவர்க்குச் சுவை பயக்கும் வகையில் கருத்துக் களைக் கோவைப்படுத்தியும், மாணவர்க்கு ஏற்ற எளிய நடையில் இயற்றியும் உதவியுள்ள இவ்வுரை கடைநூல், பொதுவாகத் தமிழகத்திற்கும், சிறப் பாகத் தமிழ் மாணவர்க்கும் பெரிதும் பயன்படுவ தாகும். இதுபோன்ற மற்றிரண்டு நூல்களையும் விரைவில் வெளிப்படுத்தி யுதவுமாறு ஆசிரியரை யான் வேண்டுகின்றேன்.