பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்க கெளரவ செயலாளர் ஜனப் எம். எஸ். அப்துல் மஜீத். பி.எ. எழுதியது திருக்குறள் ஓர் எல்லையற்ற பரவை. அதில் மதிப்பில்லா மாணிக்கங்கள் ஆழ்ந்து கிடக்கின்றன. ஆற்றலுடையோர் அவைகளைத் தேடி எடுத்துத் தாங் கள் இயற்றும் நூற்களில் கலங்கரை விளக்கமாக அமைக்கின்ருர்கள். திருக்குறள் தோன்றிய காலங் தொட்டு அதைத் தழுவிய நூல்கள் பல வெளியாகி இருக்கின்றன. இன்னும் வெளியாகிக்கொண்டும் இருக்கின்றன. அவ்வாறு திருக்குறளைத் தழுவிய நூல்களிலொன்று வித்துவான். பாலூர் கண்ணப்ப முதலியார் வெளியிடும் வள்ளுவர் கண்ட அரசியல்' இந்நூல் மூன்று பகுதிகளே உடையது என்று ஆசிரியர் அறிவிக்கின்ருர். அவற்றில் காடும் மக்க ளும்' முதல் பகுதியாகும். அப்பகுதியை கான் படித்தேன். அது பல வகையில் பயன் தரக்கூடிய தாகவே இருக்கிறது. இந்நூலேத் தமிழகம் ஏற்றுப் போற்று மென்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந் நூலேப் படிக்கும் சமயம் பொதுவாகத் தமிழ் இயலிலும் சிறப்பாக வள்ளுவர் மறையிலும் ஆசிரியருக்கு இருக்கும் ஆழ்ந்த ஆற்றலும் ஆராய்ச்சி யும் வெளியாகின்றன. - வள்ளுவர் கண்ட அரசியலில் வளம் பெற்ற நாடு, ஆழ் அகழி, அரண், உயர் நடை குடி மக்கள் மானமழியாது பெருமைபட வாழ்தல் முதலியன இடம் பெற்றுள்ளன. அவைகளே அழகிய முறையில் ஆசிரியர் ஆணித்தரமான ஆதாரங்களுடன் விளக்கி யுள்ளார். விளக்கம் படிக்கப் படிக்கச் சுவை தரு கின்றது. 'நாடும் மக்களும்” எனும் நூலும் அதைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் ஏனைய இரு நூல் களும் வெற்றியுற வாழ்த்துகின்றேன்.