பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகம் வரலாற்றுச் சிறப்பு விரிவுரையாளர் (Reader) டாக்டர். எம். ஆரோக்கியசாமி M.A., Phd. எழுதியது மணல் கேணி தொட்டனேத் துாறும். திருக் குறளும் அத்தகையதோர் அறிவுக்கேணியே. இக் கேணி தோண்டத் தோண்ட ஊறும். அவ்வூற்றுர்ே பருகப்பருகத் தெவிட்டா இன்பந்தரும். இவ்வின் பத்தை நுகர முய்ன்றவர்கள், முயன்று வருகின்ற வர்கள் பலர். ஆனல், தாம் மட்டும் அப்பேரின் பத்தைத் துய்த்தால் போதாது. தாம் பெற்ற இன் பம் பெறுக இவ்வையகம்' என்ற எண்ணத்தோடு அவ்வின்பத்தைப் பிறருக்கும் அளிக்கின்றனர், சிலர் தெள்ளிய உரை நடை நூல் வடிவிலே. இத்தகைய நூலே புலவர் பாலூர் கண்ணப்ப முதலியார் இயற்றி யுள்ள வள்ளுவர் கண்ட அரசியல்". இந்நூல் திருக் குறள் பொருட் பாலுக்குச் சிறந்த விளக்க நூலாகும்; ஆசிரியர் பிற சங்க இலக்கியங்களிலிருந்து தக்க மேற் கோள்களை எடுத்துக் கையாண்டு இனிய நடையில் திருக்குறள் கருத்துக்களை இதில் விளக்கியுள்ளார். இம்முயற்சி பெரிதும் போற்றற்குரியது. ஆசிரியரின் கன்முயற்சி மேலும் மேலும் ஓங்குவ, தாகுக.