பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வண்ணையம்பதி சர் தியாகராய கல்லூரிப் பிசின்ஸ் பாலும், சென்னைப் பல்கலைக் கழகச் சிண்டிகேட் செனெட், அகடமிக் கவுன்ஸில் முதலிய வற்றின் அங்க்த்தினருமாகிய լք). கி. சணமுகம, எம்.ஏ., எல்.டி., . எழுதியது வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதி யுள்ள வள்ளுவர் கண்ட அரசியல்' என்னும் நூலேப் படித்து மகிழ்ந்தேன். அன்னர் திருக்குறள் ஆராய்ச்சியைப் புதுமுறையில் கையாண்டிருக்கிரு.ர். இது பாராட்டத்தக்கது. பொருட்பாவில் புதைந்து கிடக்கும் வள்ளுவர் கருத்துக்களே உரை நடையின் மூலம் ஒரு கோவையாகச் செய்ததுமன்றி, அதற்குப் பொருத்தமான சான்றுகளையும் தமிழ் இலக்கியங்களி லிருந்து வழங்கியிருக்கின்ற முறை ஆசிரியரின் கல்வித் திறனையும், பன்னூல் ஆராய்ச்சி அனுபவத்தையும் தெற்றென விளக்குகின்றது. வள்ளுவர் கண்ட அரசியல்' என்ற தலைப்போடு இன்னமும் இரண்டு நூல்கள் வர இருக்கின்றன. காம் எதிர்பார்க்கும் அளவில் இந்த நூல்கள் சிறப்போடு விளங்கும் என்பதில் ஐயமில்ல. ஆசிரியர் விற்பனர்களுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றுகின்ற திருப்பணிக்குத் தமிழகம் அவரைப் போற்ருமல் இருக்காது. அரசியலைப்பற்றி மேல்நாட்டு நூல்களில் கானும் கருத்துக்களையும் உண்மைகளையும் மாணவர்கள் வள் ளுவர் வழங்கித்தந்த பொன் பொழிகளேக் கொண்டு ஆராயவும் சீர்தூக்கிப் பார்க்கவும் வித்துவான் கண்ணப்ப முதலியார் தம் நூலின் மூலம் வழி காட்டி அமைத்திருப்பது காம் பெற்ற பேறு எனக் கொள்ளலாம். வள்ளுவம் தழைக்க.