பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியில் செல்வம் | 13 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல துரதியம் இல்லே உயிர்க்கு ' என்னும் குறட் கருத்தையும் கவனியாது இருப்பது இன்றன்று. - - புகழே இம்மை மறுமைகளுக்கு உறுதியாகிய அறமாகும். ஆதலால், ஈகையால் அப்புகழை விரும்பு தல் வேண்டும். அவ்வாறு இன்றிப் பொருளைச் சேகரிக்கும் பொருட்டுத் துன்புறுதலும், காத்தல் பொருட்டுத் துன்புறுதலும் அறிவின்மையே ஆகும். இவ்வறிவினரைப் பூமிக்குப்பாரம் என்னது வேறு என்ன கூற இயலும் இவர்கள் பிறவாது இருப் பதே மேல் அல்லவா ! இவர்கள் கீர்த்தி, தானம், கிருபை ஆகிய இவற்றை இழந்தவர் அன்ருே? செல்வம் பெற்றவன் எவராலும் விரும்பப்படுதல் வேண்டும். அப்படி விரும்பப்படுதற்குக் காரணம் தான்பெற்ற பொருளைப் பிறர்க்கு ஈவதல்ை என்க. ஈயாயிைன், அவனை எவரும் விரும்பார். இப்படிப்பட் டவன் இறந்தால் தனக்குப் பின் இவ்வுலகில் எதை நிலை நிறுத்திச்செல்ல வல்லவனவான் தான் இறந்த பிறகு தன்னப்பற்றி நினைக்கவாவது பெற்ற பொரு அளச் சிறிது பிறர்க்கு ஈய வேண்டாவா ஈந்தால் தானே புகழ் நிலைக்கும் வள்ளுவர் மற்ருேர் இடத்தில், உரைப்பார் உரைப்பவை எல்லால் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் ” என்ருர். புகழைத்தானே எச்சம் என்று கருதவேண்டும்? குலம், உருவு, குணம், ஒழுக்கம் புதல்வர், பொருள், பூமி so