பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வள்ளுவர் கண்ட அரசியல் ஆகிய இவற்றை ஒருவன் தான் இறந்த பின் விட்டுச் சென்ருல் அவை எச்சம் என்று கருதப்படாதோ எனில், அவை புகழ்போலச் சிறப்புடையன அல்ல. ஆதலின், உலகம் புகழையே எச்சமெனக் கருதும். கோடிகோடியாகப் பொருளை ஈட்டியவன் ஏழை களுக்கு ஈயாமலும், தானும் துய்க்காமலும் இருந்தால் அப்பெரும் பொருளால் அவனுக்குப்பயன் இல்லை. இத்தகையவன் பொருளைப் பெற்றிருந்தும், ஏழையைப் போன்றவனே. ஏன்? ஏழை பிறர்க்கு ஈயவும் இயலாது ; தானும் துய்க்கவும் ஒண்னது அன்ருே? ' செல்வம் மிகப்படைத்தும் தியாகபோ கங்களில்லார் செல்வமென்ன செல்வம் தினகரா ' என்னும் தினகர வெண்பாவையும் காண்க. தானும் அனுபவியாமல், உதவியினேப் பெறத் தக்கவர்க்கு ஈயாமலும் வைத்திருக்கும் பொருள், அவனுக்கு ஒரு நோய் போன்றதேயாகும்; துன்பமும் ஆகும் ; குற்றமும் உடையதாகும் ; பாவத்திரள் ஒன்றுகூடியது போன்றதும் ஆகும். மேலும், பிறர்க்கு உதவாதான் செல்வத்தின் இயப்பைப் பாருங்கள். ஒருத்தி கல்ல உடல் அழகு, உள்ளத்தழகு முதலிய எல்லாம் பெற்றும், தான் ஒரு மணமகனேடு வாழ்தல் இன்றித் தன் இளமையினக் கழித்து முதுமையுற்று வருவாளாயின், அவள் அழகு கலங்களைப் பெற்றும் பயன் உறுவாளோ? ஒருக்காலும் பயன் அடை யாள். அதுபோன்றதே ஏழைகட்கு ஈயாதவன் தன் ளிைடம் செல்வத்தைப் பெற்றிருப்பது. அதாவது