பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியில் செல்வம் i 15 அவன் செல்வம் பயன் அற்றதாகும். இங்குச் செல்வத்தைப் பெற்றும் பிறர்க்கு உதவாத ஒருவன் வரலாற்றுக் குறிப்பினையும் அறிதல் நலமே. கும்பகோணத்தில் மருத்தர் என்பவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அதே ஊரில் திருத்தங்கி என்பவ னும் வாழ்ந்து வந்தான். இருவரும் தோட்டப் பயிர் செய்து தம் வாழ் நாளேக் கழித்து வந்தனர். ஆல்ை, மருத்தர் தம்மை காடிவந்தவர்கட்கு கல் உணவு ஈந்து தம்தோட்டத்தில் வாழைகள், இலைகள் பூக்கள், காய்களை விற்றுவிற்று ஏழை எளியவர்கட்கே ஈந்து வந்தார். திருத்தங்கியோ எவர்க்கும் ஒன்றை யும் ஈயாதவனுய்த் தன் தோட்டத்தை கன்கு செழிப்புடையதாக வைத்துக்கொண்டு, ஓர் இலையும், பூவும், காயும், பழமும் குறைவின்றி இருக்க வைத் திருந்தான். இத்தகையவனே ஒளவையார் காடிவந்து உணவு தருமாறு கேட்டனர். அவ்வுலோபி, மருத்தர் வீட்டிற்குச் சென்று கேட்குமாறு அனுப்பிவிட்டனன். ஒளவையார் மருத்தர் வீட்டிற்குச் சென்ருர், உணவு கேட்டார். மருத்தர் இல்லை என்று உரையா இதயம் படைத்தவர் ஆதலின், உணவுதர இசைக்து, வாழையிலை பெறத் திருத்தங்கியிடம் வந்த கடகை ஓர் இலை கேட்டார். அப்பாவி தன்னிடம் பல இலைகள் இருக்கவும், ஒர் இலே கொடுக்க மறுத்து விட் டான். இதனை அறிந்து ஒளவையார் திருத்தங்கி செல்வம் பெற்றும் பயன் அற்றவன். ஆனால், மருத்தர் வறுமையுடையராயினும் விருந்தினரை என்றும் உப சரிக்கும் இயல்பினர் என்ற பொருளில்,