பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#16 வள்ளுவர் கண்ட அரசியல் திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து கிற்கும் மருத்தன் திருக்குடந்தை வாழை-குருத்தும் இலையுமில் பூவுமில காயுமில் என்றும் உலகில் வருவிருந்தோர் உண்டு என்று ஒருபாடலே பாடினர். இப்படிப்பட்ட திருத்தங்கியை முதுமொழி மேல் வைப்பு என்னும் நூல், - ' எங்கள் இறை அன்பருக் கொன்றீயாமையால் பிறந்து பங்கப் படத்துணிந்த பாவித்திருத்-தங்கி ' என்று வைகிறது. திருத்தங்கியைப் போன்றவர் பெற்ற செல்வம், ஊர் நடுவே கச்சுத்தன்மையுடைய மரம் கன்கு பழுத்து இருப்பதற்குச் சமம்தானே பழம் என்று எண்ணிகச்சுமரத்தின் பழங்களில் ஒன்றைத் தின்ருல், விடம் பொருந்தப்பெற்று இருத்தலின், அதனை உண் டவர் இறப்பர் அன்ருே? அது போலவே பிறரால் விரும்பப்படாதவன் செல்வம் உடையவன் என்று கருதி அவனிடம் ஏதேனும் கிடைக்குமென ஏமாந்து எவரேனும் சென்ருல், பயனின்றித் தீங்கு பெற்றே திரும்புவர். அருகல தாகிப் பலபமுத்தக் கண்ணும் பொரிதான் விளவினை வாவல் குறுகா பெரிதணிய ஆயினும் பீடி.லார் செல்வம் கருதும் கடப்பாட்ட தன்ஆறு ”. என்னும் நாலடியார் பாடலேக் காண்க.