பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருந்து #23 உடம்பினே முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண் டான்என் றுடம்பினே யானிருந் தோம்புகின் றேனே. என்று எச்சரிகை செய்தனர். பாலோடாயினும் காலம் அறிந்துண்” என்பது கொன்றை வேந்தன் அன்ருே நொறுங்கத் தின்றவன் நூருண்டிருப் பான்' என்பது ஒரு பழமொழி அன்ருே ஆகவே, முன்பு உண்ட உணவு சீரணம் ஆயிற்ரு என்பதைக் கவனித்துப் பசி நன்கு எடுத்தபின் மாறுபாடு இல் லாத உணவுகளே உண்ணவேண்டும். மிகப் பசிக்க வேண்டுவது ஏன் எனில், சீரணமாவதோடு அல்லா மல் முன்பு உண்ட சுவையும் நீங்கவேண்டும் என்ப தற்கென்க. உணவுகளில்மட்டும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது இல்லை. கால இயல்போடும் மாறுபடாமல் உண்ணவேண்டும். சுவை வீரியம் மாறுபடாவாறு அறிந்தும் உண்ணவேண்டும். உண் பவன் பகுதியோடும் மாறுபடாது உண்ணவேண்டும். உண்பவன் பகுதியோடு மாறுபடுதலாவது வாதபித்த சிலேட்டுமங்கட்கு அடாதவவற்றை உண்ணலாகும். கால இயல்போடுமாறு படுதலாவது பெரும்பொழு துக்கு ஒவ்வாதனவற்றையும், சிறுபொழுதுகட்கு ஒவ்வாதனவற்றையும் உண்ணலாகும். சுவை வீரி யங்களோடு மாறுபடுதலாவது தேனும் நெய்யும் அளவு தெரியாமல் ஒன்றுகூட்டிஉண்ணுதலாகும். இப்படி உண்டால் கோயும் இறப்புமே வந்த ஆகும்.