பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வள்ளுவர் கண்ட அரசியல் தினமும் ஒருபொழுது அசனம் பண்ணில்ை, நோயே வராது. மீதுரண் விரும்பேல் ' என்னும் ஆத்திகுடி நினைவில் இருக்கவேண்டும். உணவினை மேலே கூறியவகைகளில் உண்டு வருதல் வேண்டும். உள்ளம் விரும்பும் அளவில் உண்ணுமல், கோய்வரா அளவில் உண்ணவேண்டும். இப்படி உண்டால் உயிர்க்குத் தீது ஏற்படாது. மாறுபாடுடன் உணவு உண்டால் பலாப்பழத் தைத் தின்றபின் சுக்குத் தின்பதைப் போன்ற பயனே உண்டாகும். கைப்பு, புளிப்பு, இனிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய சுவை வேறுபாடு டைய உண்டியே உண்ண வேண்டும் என்பது இன்றி, சுவையுடைய உண்டிகளில் சிலவற்றை ஒழித்தும் மருத்துவர் கூறும் முறைப்படி உண்டுவரின் இடை யூறு உடம்பிற்கு எய்தாது. மிகுதியாக உணவினே ஒருவன் உண்பாயிைன், அவனுக்கு நோய் கட்டாயம் நீங்காது இருந்தேதீரும். சீரணமானது என்று அறிந்து உண்பவனுக்கு என்றும் இன்பம் இருந்தே திரும். இவ்வின் பத்தால் வாத பித்த சிலேட்டுமம் தத்தம் கிலேயில், திரியமாட்டா. மனம் மொழி மெய்கள் அவன் வயத்தனவாகும். இதல்ை அறம், பொருள் இன்பம் வீடு ஆகிய காற்பொருள்களே யும் நன்கு அடையலாம். வயிற்றுத் தீயின் அளவு தெரிந்து, அதற்கேற்ப உண்ணவேண்டும், தன் பகுதியும், அதற்கேற்ற உணவும் காலமும் ஆராய வேண்டும். வேண்டியதோர் உணவை, வேண்டிய தோர் காலத்து வயிற்றுத் தியளவை அறியாது உண் டால், கோயும் அளவில்லாமல் பெருகும். உண்டி