பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o வள்ளுவர் கண்ட அரசியல் காடு குறையாத விளேச்சலப் பெற்றிருத்தல் இன்றியமையாதது. குறையாத விளைவாவது, மழை இல்லாத காலத்திலும் சாவிபோகாது, விளேதல் வேண்டும். செல்வர்களும் அறிவோர்களும் நல்லோர் களும் நிறைந்து காணப்படுதல் வேண்டும். குறையாத விளைவு காட்டிற்குத் தேவை என்றதால், அவ்விளை வினே ஆக்கவல்ல உழவர்கள் காட்டில் மலிந்திருத்தல் இன்றியமையாதது என்பதைக் கூறவும் வேண்டுமா ? உழவு மிகுந்தால் உணவுப்பொருள்களும் மிகுதிப்படும் அல்லவா ? உணவு மிகுதியானுல் நாட்டில் வறுமை தலைகாட்டாது ஒழியும். அறிவோர்கள் மலிந்து நாடு விளங்கவேண்டும் என்று கூறியதனுல், அறிவோர் எனப்படுவோர், பற்றைத் துறந்தவர்களும் அந்தணர் களுமே ஆவர். கல்வியும் ஞானமும் கற்குணமும் அமைந்தவர்களும் இவ்வறிஞர்களைச் சார்ந்தவர்களே. இவர்கள் நாட்டில் மலிந்து காணப்பட்டால், அங்காடு அழியாது. செல்வர்கள் கிறைந்து இருத்தல் காட்டிற் குச் சி றப்பாகும் என்றது, கப்பலின் மூலம் கடலேக் கடந்து வெளி நாடுகளுக்குச்சென்று வாணிபம்செய்து அரும் பொருள்களேத் திரட்டிவரும் முயற்சியுடை யோர் நிறைந்திருத்தல் வேண்டும் என்பதாம். திரை கடல் ஒடியும் திரவியம் தேடு ' என்பது நம் நாட்டு முதுமொழிதானே : கடல் கடந்துதான் மக்கள் பொருள் ஈட்டவேண்டும் என்பதில்லை. உள்நாட்டில், பல்வேறு இடங்களுக்குக் கால் நடையாகச் சென்றும் வாணிபத்தினைப் பெருக்கிப் பொருளைத் திரட்ட லாம். இம் முறையில் காட்டிற்குப் பொருளைத் தேடி வரும் ஊக்கமுடைய மக்களைப்பற்றிச் சிலப் பதிகாரம்,