பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 உரைசால் சிறப்பின் அரசு.விழை திருவில் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்த தாகி அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேன ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டிக் குலத்தில் குன்றக் கொழுங்குடிச் செல்வர் என எடுத்துக் கூறுகிறது. இவர்கள் தேடும் செல்வம் ஈயக் குறைபடாது; பிறரால் இகழவும்படாது. இந்தத் தன்மைகள் அனைத் தும் நாடுகள் பெற்றிருந்தன என்பதற்கு ஒரு சான்ருக ஏமாங்கத காட்டைக் கூறலாம். அதைப்பற்றித் திருத்தக்கதேவர், நற்றவம் செய்வார்க்கிடம் தவம்செய்வார்க் குமதிேடம் நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள்செய் வார்க்குமிடம் பெற்றஇன்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென மற்றநாடு வட்டமாக வைகும்.மற்ற நாடரோ. என்று கூ றியுள்ளார். நாட்டிற்கு விளைவு மிகமிக இன்றியமையாதது என்று கூறினுேம் அன்ருே? அவ்விளைவு முழு விளைவாக இருக்கவேண்டும். இப்படி விளைவுதரும் நிலங்கள் அல்லவோ முப்போகம் விளையும் நிலங்கள் என்று கூறப்பட்டு வருகின்றன முப்போகம் விளைந்து, முழுவிளைச்சலை நிலங்கள் தருவதாயின், அந் நிலங்களுக்கு எந்தக் கெடுதியேனும் இருத்தல் கூடுமோ ? கூடாது. நிலங்களுக்கு மிகுந்த மழையி லுைம், மழையே இல்லாமையாலும், எலி, விட்டில்