பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:) வள்ளுவர் கண்ட அரசியல் ஒன்றை உதாரணமாகக் கூறலாம். சோழன் கலங் கிள்ளியின் தம்பி மாவளத்தானும், தாமம்பல் கண்ணன் என்னும் புலவரும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, தனக்குத் தோல்வி வரும் என்று அறிந்த மாவளத்தான் ஒரு காயை மறைத்துக் கையில் வைத்திருந்தான். இதனை அறிந்து கொண்ட புலவர், வெகுண்டு உடனே நீ சோழன் மகன் அல்லே' என்றுகூறினர். இதன் பொருள் யாது? "உன் பிறப்பு ஐயத்திற்கு இடந்தருகிறது. கற்பிறப் பாயின், இந்த இழிசெயலைச் செய்யாய்' என்ப தல்லவா? அவனே நோக்கி அப்புலவர் பாடிய பாடல்,

ஐயமுடையேன் ஆர்புனே தெரியல்கின் முன்னேர் எல்லாம் பார்ப்பார் கோவன செய்யலர் மற்றிது நீர்த்தோ தினக்கிது ' என்பது.

கற்குடிப் பிறந்தார் இன்னர் என்பதை அவர்கள் பேசும் பேச்சின் மூலமாகவும் அறியலாம். குணமும் இனமும் பேச்சால் தெரியவரும். இதனை உதாரண முகத்தால் விளக்கினல், நிலமானது அதன் கண் மறை பட்ட விதை, முளையின் மூலம் காட்டுவது போல் எனக் கூறலாம். அதாவது மறைபட்டிருந்த விதை இன்ன விதை என்பது, முளையால் அறியவருவது போல், மக்களின் வாய்ச்சொல் நல்ல குடியினர் திய குடியினர் என்பதை வெளிப்படுத்திவிடும் என்ப தாம். ஆகவே, நற்குடி மக்கள் தம் வாயால் தீயன வற்றைக் கூறமாட்டார். கூறவும் கூடாது.