பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிசெயல் வகை 37 உடம்பைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப்பற்றி வருவனவும் தெய்வத்தைப் பற்றி வருவனவுமாகிய துன்பங்கள் வராமல் பாடுபடுவதால் துன்பம் தோன் ருது இன்பமே தோன்றும் வெளித்தோற்றத்திற்கு உடம்புக்கு வருத்தம் தருவது போலக் காணப்பட்டா லும், அவ்வருத்தம் இம்மைக்கும் மறுமைக்கும் இன் பம் தரவல்லதாகும். ஆகவே, துன்பம் வரினும் நானு தல் கூடாது. காணுமையால், புகழிேவரும். துன்பம் பொறுத்து நானுதவனே ஆண்மகனும் ஆவான். இத்தகைய நல்ல ஆண்மை யுடையவனப் பெருத குடியானது ஆதரவற்று அழிந்துபோகும் என்று கூறவேண்டுமா குடியாகிய மரம் துன்பமாகிய கோடரியால் அழியாதிருக்கப் பலவான் தேவை என்பதை நாம் மறத்தல் கூடாது. இத்தகைய நல்ல் பலவானை ஆண்மகன் இல்லாமையால் அன்ருே திருதராட்டிரனது குடியே அழிந்தது. இதனைத் தானே சோமேசர் முதுமொழி வெண்பா,

  • மற்றிருத சாட்டிரன் சந்தானமெலாம் மாய்ந்ததே

சுற்றுநீர்த் தென்குளத்தார்ச் சோமேசா" என்று கூறுகிறது எவ்வாறேனும் தம் குடும்பம் அழியாதவாறு காத்தல் குடிமகன் கடமை என்க. துரங்குசிறை வாவலுறை தொல் மரங்கள் என்ன இங்குகுல கையஅதனுள் பிறந்த விரர் தாங்கல் கடன் ” என்னும் திருத்தக்கதேவர் வாக்கையும் காண்க. எனவே, நாட்டுக்கு நல்ல குடும்பமும், அக்குடும்பம் அழியாதிருக்க நல்ல ஆண்மை மிக்க ஆண்மகனும் தேவை என்பதை அறிவோமாக.