பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உலகம் போற்றும் தமிழ் மொழியில் திருக்குறள் உயர்ந்த நூல்களுள் ஒன்ருகத் திகழ்கிறது. இந் நூல் மொழி வேறுபாடு, இனவேறுபாடு, சமய வேறுபாடு இன்றி, எல்லோரும் ஏற்றுப் போற்றும் கிலேயில் இன்று வரையில் இருந்து வருகிறது. இத்தகைய பெருமைபெற்று விளங்கிவருவதால்தான் பழங்காலம் முதற்கொண்டே பதின்மர் இதற்கு உரை எழுதிச் சிறப்புற்றனர். அந்தப் பெருமை அழிவுருதிருக்கவே இக்காலத்திலும் கூடத் திருக்குறள் நூல், பலப்பல வடிவில் வந்துகொண் டிருக்கிறது. எத்துணே வகையில் இந்நூலின் கருத்துக்கள் வெளிவரினும், மேலும் இந்நூல் பலதுறை வடிவங்களே ஏற்று வருவதற்கு உரிய கிலேமை பெற்றே திகழ்கிறது. இதனே உளங்கொண்ட யானும், திருக்குறட்கு என்னுல் ஒரு தொண்டினேச் செய்ய வேண்டுமென்று எண்ணி, உரைநடையில் இந் நூலே வெளியிடத் துணிந்தனன், உரைநடை நூல்கள் பல திருக்குறளே ஒட்டிவந்துள்ளன. என்ருலும், என்னுல் வெளியிடப்படும் இவ்வுரை நடை ஆால் பெரிதும் வேறுபாடு உடையது என்பதை முன்பு வெளிவந்த நாற்களேயும் இந்நூலேயும் ஒப்பிட்டுப்பார்ப்பின் உண்மை வெளியாகாமல் இராது. இவ்வுரைகடை நூல்: இதுவரை வெளிவந்துள்ள திருக்குறள் உரைகளே ஒட்டி, அவ்வுரைகளில் கருத்துக்களே விடாமலும், தொடர்பு கெடாமலும், எழுதப்பட்டதாகும்.