பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

影 யான்கொண்ட திருக்குறள் உரைகள் பரிமேல் அழகர் மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்க்ர், பரிதியார் பழைய உரை என்பன. ஆல்ை, இவ்வுரை ஆசிரியர்கள் திருக்குறள் பாக்களின், வைப்பு முறையில் வேறுபட்டவர் கள். யான் பரிமேல் அழகர் வைப்பு முறையை ஒட்டியே உரைநடையினே எழுதியுள்ளேன். உரைநடைப்படுத்தும் போது மற்றையோருடைய உரைப் பகுதிகளைப் பரிமேல் அழகர் வைப்புமுறைக் கிணங்கவே இணைத்து வரைக் துள்ளேன். இவ் வுரைகடை ஒவ்வொரு திருக்குறட்பாவைச் சார்ந்து எழுதப்பட்டதேனும், குறட்குப் பொருள் தருவது போன்று இராமல், தொடர்புடைய கருத்துக்களைப் போன்றே அமைந்து காணப்படும். அக் கருத்துக்களுக் கேற்ற பல நூல் மேற்கோள்களுடனும் இது திகழ்ந்து விளங்குகிறது. உதாரணங்களும் சில எடுத்துக் காட்டுக் களாகக் காட்டப் பட்டிருக்கின்றன. இம் முறையில் இவ் வுரை நடை நூல் எழுதப்பட்டிருப்பதல்ை, திருக்குறளைப் படிக்க விரும்புபவர் 'மூல நூலேப் படிக்க இது பெருந்துணை யாக இருக்கிறது” என்று எண்ணுவதுடன், இவ்வுரை கடையினைப் படித்தே உள் பொருளே உணரலாம் என்னும் உணர்ச்சியும், கதைபோன்று படிக்க எளிமையாக இருக் கிறது. இது, என்னும் மகிழ்ச்சியும் அடைவர் என்பது என் துணியாகும். இவ்வமைப்பு முறையில் எழுதப்பட்ட இவ்வுரைகடை நூல், திருக்குறட் பொருட் பாலே அடிப்படை யாகக் கொண்டு வெளிவருகிறது. பொருட்பால் அரசியல் முறையினை அறிவிப்பதாதலின், வள்ளுவர் கண்டி அரசியல் என்னும் தலைப்பினைப் பெற்றே. இவ்வுரைகடை வெளிவருகிறது. இத் தலைப்பின் கீழ், மூன்று தனித்தனி