பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# * * 慕 நூல்கள் வர இருக்கின்றன. அவையே 1. நாடும் மக்களும் 2. அரசன் பண்பும் அவன் ஆட்சி முறையும், 3. அரசனது அங்கங்களும் அவற்றின் இயல்புகளும் என்பன. அவற் அறுள் இது நாடும் மக்களும் என்னும் பெயருடன் வெளிவரும் முதல் நூலாகும். அடுத்தபடியாக ஏனைய இரண்டு ஆாற்களும் விரைவில் வெளிவரும். காடும் மக்களும் என்னும் பகுதியில், நாட்டின் அமைப் புக்கு நாடு அரண் என்னும் இரண்டு அதிகாரங்களே யும், குடி மக்கள் இயல்பிற்குக் குடிமை, குடிசெயல்வகை, மானம், பெருமை, பண்புடைமை, காணுடைமை, சான் ருண்மை, கயமை, என்ற அதிகாரங்களேயும், நாடு வறுமை இன்றி இருக்கவேண்டும் என்பதையும் வறுமை காரணமாக இரவு எடுக்ககேரின், யாரிடத்தில் சென்று யாசகம் பெறவேண்டும் என்பதையும், அதுவே காரண மாகப் பிச்சை எடுத்தல் கூடாது என்பதையும் விளக்க கல்குரவு, இரவு, இரவச்சம் என்ற அதிகாரங்களேயும், இணைத்து, வறுமை நீங்க உழைத்து உணவு தேட வேண்டும் என்பதை உணர்த்த உழவு என்னும் அதிகாரத் தையும், குடி மக்கள் உடல் உரம்பெற்று நோய் இன்றி இருக்க வேண்டும் என்பதை அறிவிக்க, மருந்து எனனும் அதிகாரத்தையும் இயைத்து தொடர்பு காட்டி எழுதி யுள்ளேன். இத்தொடர்பு காரணமாக அதிகாரங்கள் பழைய முறைப்படி இன்றி, என் கருத்துக்கேற்ப மாற்றி அமைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதையும் அன்பர்க்ள் அறிய வேண்டுகிறேன். இவ்வாறு எழுதப்பட்ட இவ்வுரைகடை நூலேத் தமிழ் உலகம் ஏற்று, இதன் தொடர்புடைய ஏனைய இருநூல் களும் விரைவில் வெளிவருதற்கான ஊக்கமும் ஆர்வமும் எனக்கு அளிக்குமாறு வேண்டுகிறேன். இந்துலுக்கு மதிப்புரை எழுதிய அறிஞர் பெருமக்களுக்கும், இந்நூலை