பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நாண் உடைமை. மக்கள் பண்புடைமையுடன் நாண்உடைமை யாகிய குணமும் பெற்றிருத்தல் இன்றியமையாதது. நானுடைமையாவது தமக்குத் தகாத செயல்கள் குறித்து காணுதல் உடையராம் தன்மை என்பதாம். இதனை இன்னமும் விளங்கக் கூறின் அறம்பொருள் இன்பங்களில் பிறர் பழிக்காமல் இருக்க ஒழுகுதலும், திேயில்லாததைக் கண்டால் காணுதலும் கானுடை மையாகும். இந்நாணுடைமை சிறப்பாகப் பெண் மக்கள் இனத்திற்கே உரியது என்று கருதலாம். ஏனெனில், அவர்கட்குரிய குணங்களாக வகுத்த அச் சம், காணம், மடம், பயிர்ப்பு என்னும் நான்கனுள் இதுவும் ஒன்ருகக் கூறப்பட்டிருத்தலினல் என்க. நக்கீரரும், காண் என்பது பெண்டிர்க்கு இயல்பாக உளதொரு நன்மை ' என்று விளக்கினர். ஆனால், கானுடைமை பெண்கள் இனத்திற்கே அன்றி, ஆண் கள் இனத்திற்கும் வேண்டற்பாலது என்னும் குறிக் கோளுடன், நாண் என்னும் மொழிக்கு நக்கீரர் உரை கூறியதுபோல் நச்சினர்க்கினியர் கூருமல், நாணுவது செய்யத் தகாதனவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல்.” என்று விளக்கம் கூறினர். வள்ளுவரும் ஆண் மக்கள் மேற்கொள்ள வேண்டிய நாண முடைமையையும் பெண் மக்கள் கொள்ளவேண்டிய நாணமுடைமை யையும் வேறு படுத்தியே காட்டியுள்ளார். நன் மக் கள் நாணம் இழிந்த செயல் காரணமாக காணுதல் என்றனர். அவ்வாறின்றி மனம் மொழி மெய்களின்