பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வள்ளுவர் கண்ட அரசியல் பண்பின்றி அறிவுக்கூர்மை இருந்து மக்கட்கு நன்மை இல்லை. மக்கட் பண்பு இல்லாதவர் மரம் போல்பவர்; அதாவது ஆறறிவு உடைய மக்கள் அல்லர். ஒர் அறிவுடைய தாவரம் போன்றவர் என் பதாம். பண்புடைமையோடு கூடிய அறிவுடைமை நட்பின்றிப் பகைமைச் செய்வாரிடத்தும், அன் புடைமையே காட்டிகிற்கும்; அன்பு காட்டாதபோது அன்புடையார்க்கு இழுக்காகும். பிறரோடு நட்புச் செய்து ஒழுகும் பண்பில்லேயானல், உலகியல் தெரி யாது எ ல் ல | ருட னு ம் கூடி இருந்து மகிழ் தலைச் செய்யாதவர்க்கு உலகம், பகலிலும் இருளில் பட்டதாகும. அதாவது தீவினைப்பயன் வந்தால், " இதற்கு நான் கலக்கம் அடையேன்." என்று கூறும் பண்பு அற்றவர்க்கு உலகம் பகலிலும் இருளா கவே தோன்றும். அவர்கட்கு உலக திேயேதெரியாது. பண்புடைமை யில்லாதார் பெருஞ் செல்வராயினும் பயனில்லே. அச்செல்வம் கெட்டொழியும். அப்படிக் கெடுதல் எதுபோன்றது எனில், பால் துய்மையுடைய தாயினும் அது பொருந்துதற்குரிய பாத்திரம் தூய தாக இல்லையாயின் அதில் பெய்யப்பட்ட பால் கெட் டொழிவதுபோல் என்க. பண்பில்லாமல் செல்வத்தைப் பெற்றும் அச் செல்வத்தின் பயன் இழந்ததோடு அல்லாமல், செல் வத்தையும் இழந்தனர் நான்கு வணிகர்கள் என் பதைச் சோமேசர் முதுமொழி வெண்பா, உன்பணிக் கென்ருேதி கல்காச் செல்வம் உததிஉறத் துன்பமுற்ருர் கால்வணிகர் சோமேசா. என்று நமக்கு எடுத்துக்காட்டுகிறது,