பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைமை 6i யாட்டாகவும் தன்னை இகழ்தல் ஒருவனுக்குப் பிடிக் காது. இதல்ை நல்லோர் எப்போதும் எவர்க்கும் இனியவையே செய்வர். இதல்ை பகைவருள்ளும் பண் புடையார் பெருமை உலகத்தாசால் பாராட்டப்படும். இப்பண்புடையார் உலகில் இருப்பதால்தான் உலகமும் அழியாது நிலைத்து கிற்கிறது. ஆகவே, உல இயல் பண்புடைய மக்களிடத்தில்தான் உளது. பண் புடையார் காரணமாகத்தான் பல உயிர்களும் உண் டாயின என்றும் கூறலாம். இல்லை எனில், உயிர் இனங்களே இல்லாது போயிருக்கும். அப்படி உயிர்கள் இருந்தாலும், அவைகள் வரவ முடையனவாகவே இருக்கும். அவைகள் பூமிக்கும் பாரமானவைகளே. பண்புடைய மக்கள், இருப்பதால்தான் உலகம் நிலத்து இருக்கிறது என்பதை மேலும் தெறறத தெளிந்த உரையில் புறநானூறு, உண்டால் அம்ம இவ்உலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனில் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி அனேய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே என்று கூறுகிறது. பண்புடையவரால் எதற்கும் அழிவு வராது என் பதை முருகேசர் முதுமொழி வெண்பா, 'ஒவாச் சிவசமயம் ஓங்கியதே நால்வரால் மூவா முதலே முருகேசா” என்று கூறுகிறது;