பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளுவர் கண்ட அரசியல் நாணம் கெட்டவிடத்து உயிரையும் விடுவர் காணின் சிறப்பு அறிந்து அதனை விடாது ஒழுகும் இயல்பினர். உயிர் நிலைக்கும் பொருட்டு நானே விடார். தக்கார்க்கு உயிரினும் நாண் தக்கதன்ருே என்று தினகர வெண்பா வினவுகிறது. வாலி நாண் துறந்து உயிர் வாழ எண்ணுது உயிரை விட்டான் அல்லனே ? புண்ணுெடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினன் துண்னெனவே வாலி முனம்' என்ற சோமேசர் முதுமொழி வெண்பாவைக்காண்க. நாணினத் துறந்தவர் இடத்திலும், அதல்ை கண்டா ரும், கேட்டாரும் காணத்தக்க பழியைச் செய்கின்றவ ரிடத்திலும் அறம் வந்து அணுகாது. அனுகுதற்கு அஞ்சும். எப்படி ஒழுக்கம் தவறுமானல் அத்தவறு காரணமாகக் குடிப்பிறப்புக் கெடுமோ, அதுபோல நாண் இல்லாமையாகிய குணம் உண்டானபோது பிறப்பு, கல்வி, குணம், சொல், இனம், என்ற இவற்ருல் ஆகிய கலங்கள் யாவும் கெட்டொழியும். ஆகவே, ஒழுக்க அழிவைவிட நாண் அழிவு மிகவும் தீமை தருவ தாகும். இதனுல் குலம் கெடும் ; ஆக்கம் கெடும் ; பெருமை கெடும். ஆகவே, மக்கட்டு காணுடைமை மிக மிக இன்றியமையாதது. இந்த கானுடைமை இல்லா மல், உயிருடையார்போல் இருந்து காட்டில்நடமாடு வாரானுல், அக் கடமாட்டம், மரத்தால் செய்யப்பட்ட ஒரு பதுமை, இயந்திரக்கயிற்ருல், இயங்கி உயிரு.ை யது போலப் பிறரை மயக்குவது போலாம். எனவே, நாணம் இல்லாம் மக்கள் அல்லர். மக்களாவார் நானுடையராக இருத்தல் வேண்டும் என்பதையும் அவர்களால் நாட்டுக்கு நலம் என்பதையும் உணர்க.