பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவன் முதலியோரை இன்புறுத்தித் தானும் இன்புறுவாள் முன்னவள், எல்லாம் இருப்பினும், ஒரு விழுங்கு வெந்நீருக்கு வழியின்றித் திண்டாடித் தவிக்கவிடுவாள் பின்னவள். வேறு துறைகளிலும் இவ்விதமே - இவ்விதமே! ஆவது முன்னவளால்; அழிவது பின்னவளால், இதனாலேயே, முன்னவள் வீடு எல்லாம் உடையதாகவும், பின்னவள் வீடு ஒன்றும் இல்லாததாகவும் வள்ளுவரால் உரைக்கப்பட்டன. இக்குறட் கருத்தே, "இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை" என்னும் ஒளவையின் மொழிக்குச் செவ்வியளிக்கின்றது. இங்கே, திருவள்ளுவரின் மனைவியார், இளையான்குடி மாறரின் மனைவியார் போன்ற நற்பெண்டிரின் வரலாறுகள் நமக்குப் போதிய சான்று பகரும். மாண்பு அற்ற பத்து மாட்டுக்காரி, மாண்பு பெற்ற ஒரு மாட்டுக்காரியிடம் பால் வாங்கிய கதை பலரும் அறிந்ததே! 4. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின். (பதவுரை) (ஒரு பெண்ணிடத்தில்) கற்பு என்னும் - கற்பு என்று சொல்லக்கூடிய, திண்மை - (எண்ணம், சொல், செயல் என்பவைகள்) கலங்காத வலிமை, உண்டாகப் பெறின் - இருக்கப்பெற்றால், பெண்ணின் - (அத்தகைய பெண்ணைக் காட்டிலும், பெருந்தக்க - பெரிய தகுதி வாய்ந்த மேலான பொருள்கள். யா உள - (இவ்வுலகத்தில்) யாவை உள்ளன? (ஒன்றும் இல்லை) இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மண-உன்ர பெண் பிறப்புப்போல மேம்பட்ட யாவை உள? கற்பாகிய திண்மை உண்டாகப் பெறின். (பரி-உரை) ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை யுள, அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். வள்ளுவர் கண்ட மனையறம் 45