பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழலாகாது மணந்து இணைந்தே வாழவேண்டும். இதற்குரிய காரணங்களாவன : 1. மாறுபட்ட உருவ அமைப்புடன் ஆணும் பெண்ணுமாய்ப் படைத்திருக்கின்ற இயற்கையின் நோக்கமே. இருசாராரும் மணந்து வாழவேண்டும் என்பதே. 2. இயற்கையின் முறையீடாகிய காம உணர்வை அடக்குவது எவர்க்கும் அரிது. அடக்கவுங் கூடாது. 3. நீண்டநாள் மணந்து கொள்ளாது தனித்து வாழ்ந்த சிலர் பின்னர் அத்தனி வாழ்க்கையில் தோல்வியுற்று வயதான காலத்தில் மணந்து கொண்டிருக்கின்றனர். 4. இறுதிவரையுமே மணந்து கொள்ளாத சிலர் இடையிடையே தவறிவிட்டிருக்கின்றனர். 5. திருமணம் செய்துகொள்ளாதவர்கள் இல்வாழ்க்கையால் பெறக்கூடிய எத்தனையோ வாய்ப்பு வசதிகளை எத்துணையோ வளங்களை - எவ்வளவோ நற்பேறுகளை வீணாய் இழந்து விடுகின்றனர். 6. மேலும் இவர்களுடைய பெற்றோர்கள் வயது முதிர்ந்து வருந்துங் காலத்தில், அவர்கட்கு உணவு முதலிய வசதிகளை இவர்கள் எவ்வாறு செய்தளிக்க முடியும்? அது இவர்களுடைய இன்றியமையாக் கடமையாயிற்றே? விருந்தினர். இரவலர் முதலியோர் வரின் என்ன செய்வார்கள்? இவர்கள் பாடே திண்டாட்டமாயிற்றே அப்போது இன்னொருவரது கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? 7. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாது தப்பித்துக் கொண்டார்கள் ஆனால் இவர்கட்கு அன்றாடம் தேவைப்படுகின்ற உணவு ஆக்குதல். பிணிவந்துவிடின் மருத்துவ வேலை, வயதான காலத்தில் பணிவிடை - இன்னபிறவற்றை யார் ஆற்றுவது? திருமணம் செய்துகொண்டு வாழும் குடும்பத்தார்கள் தாமே இவர்கட்கு இவையெல்லாம் செய்ய முடியும் - செய்தும் வருகின்றார்கள்? இவர்கள் மீந்துகொள்ள இன்னொருவர் உழைப்பதா? இது என்ன முறை? - பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் "இன்ப வாழ்வு" நூலிலிருந்து