உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

9 3

ஆசிரியர் : ஆமாம். சிறிது நேரம் நின்று இந்தப் பூங்கா வில் ஒளி விளக்குகள் ஏற்றப்பட்டுள்ள அழகினைப் பார்ப்போம்! சுந்தரம் : எங்கேயும் இருட்டையே காணோமே! மாணிக்கம் : விளக்குகள் ஒளியுடன் இருக்கும்போது இருள் எப்படியப்பா இருக்கும்! ஆசிரியர் : மாணவர்களே! இன்று எல்லோரும் புறப் பட்டுப் போகுமுன்பு இந்த விளக்குகளைக் கண்டு குறட்பாவொன்று சொல்லட்டுமா? மாணவர்கள் : (எல்லோரும்) சொல்லுங்கள் ஐயா! ஆசிரியர் : இருட்டைப் பே ா க் கு வ து விளக்குதான். வெளிச்சத்தைக் கொடுப்பவை எல்லாம் விளக்குகள் தான். சூரியன், சந்திரன் முதலியவை எல்லாம் உலகத்தில் இருக்கும் இருட்டைப் போக்கி ஒலியைத் தருகின்றன. இப்போது இங்கே நாம் பார்க்கும் விளக்குகளும் இருளினைப் போக்கி ஒளியைத் தான் தருகின்றன. ஆனால் இருளினைப் போக்குகின்ற இந்த விளக்குகளை யெல்லாம் பெரியோர்கள் விளக்குக ளாகவே கொள்ள மாட்டார்கள். மனத்தில் தோன்றக்கூடிய பொய்ம்மை என்கின்ற இருளைப் போக்குகின்ற வாய்மை - பொய்யாமை என்பதைத்தான் உண்மையான விளக்காகப் பெரிய வர்கள் கொள்ளுவார்கள். உலகில் வெளியில் இருட்டி னைப் போக்கக்கூடிய ஒளியினைத் தரும் விளக்குகளைப் பெரியவர்கள் விளக்குகள் என்று கொள்ளமாட்டார் கள். மாணவர்களே! இதோ திண்ணை போலக் கட்டி யிருக்கிறார்களே! அங்கு உட்கார்ந்து குறட்பாவினைக் குறித்துக்கொள்ளுங்கள். (ஆசிரியர் சொல்லுகின்றார் - மாணவர்கள் எழுது கின்றார்கள்.) -