உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

கற்பனையில் வள்ளுவர் பேச்சின் நயமும் விளக்கமும்

உலகப் பெருமக்களே! கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்குங்கூட கேட்டல் என்னும் அரிய குணம் கண்போன்றதாகும் என்று நினை ஆட்டுகின்றேன். பிறர் சொல்லும் நற்கருத்துக்களை அமைதியுடன் கேட்டுணரப் பழகுதல் வேண்டும். அமர்ந் திருந்து கேட்டல் என்பதும் அருமையான பண்பு ஆகும். கல்வியில்லையே - கற்கவில்லையே - நல்வழிகளைக் கற்றுப் பயனடைய முடியவில்லையே என்று வருந்துவார்க் குத்தான் சொல்லுகின்றேன். கற்காமல் இருந்துவிட்ட நிலையில் இருந்தாலும் கேட்கப் பழகிக்கொள்ளுங்கள். கற்றிலன் ஆயினும் கேட்க என்பது உலக உண்மை யாகும். கேட்டுப் பழகினால்தான் பிறருக்கு எடுத்துக் கூறவும் முடியும். மற்றவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்ற பழக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால் நீங்களும் பிறர் சொல்லுவதைக் கேட்கும் நற்பழக்கத்தினைக் கொண் டிருக்க வேண்டும். நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. நுணங்கிய - நுண்ணியதாகிய, கேள்வியர் - கேள்வியினை யுடையவர், அல்லார் - அல்லாதவர்கள்,