உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

95 வணங்கிய-பணிவான வணக்கத்தினையுடைய, வாயினர்-சொல்வினையுடையவர், ஆதல்-ஆகுதல் அரிது-கூடாததாகும். இக் கருத்தினை உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்ளுங் கள். பேசுங்கால் மற்றவர்கள் உள்ளம் இன்பமுற - வியப் புற - பேசுபவர்பால் அன்பு பெருகப் பேசுதல் வேண்டும். வாய்ச் சொற்கள் அமைதியும் சாந்தமும் தற்பெருமையற்ற வைகளாகவும் இருத்தல் வேண்டும். அவ்வரிய பண்புகள் பெறுதற்கு வழியாக அமைந்துள் ளதுதான் நுணங்கிய கேள்வியர் ஆவது ஆகும். அறிஞர் கூறும் சொற்களின் நுணுக்கமான கருத்துகளைத் துருவித் துருவி உணர்ந்துகொள்ள வேண்டும். மக்கட் பிறவியில் நல்வழி காட்டும் ஊன்று கோலாக அமைந்திருப்பதும் கேள்விப் பழக்கமேயாகும். கேள்விப் பழக்கமென்பது பிறர் கூறுவதைக் கேட்டின்புறும் பழக்க மென்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்குத்தான் கேள்வி என்று பொருள். பேசிக்கொண் டிருப்பவர்களைப் பேசவே விடாமல் கேள்விமேல் கேள்வி யாகக் கேட்பதுதான் கேள்வி என்று நினைத்துவிடாதீர்கள்! 'நமக்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது, இப்படி யெல்லாம் சொற்பொழிவுகளைக் கேட்க!” என்று சிலர் பேசுவதையும் நீங்கள் அறிவீர்கள். நமக்குத் தெரிந்ததே போதும்; நமக்கு இனி தெரிந்துகொள்ள வேண்டியது என்ன இருக்கிறது?’ என்று சொல்லுபவர்களும் இருக் கிறார்களல்லவா? இன்னும் கூடச் சிலர், இவர் என்ன அப்படியெல்லாம் சொல்லி விடுகிறார்? ஏதோ அங்கேயும் இங்கேயு மாக இரண