97
97
டொன்றைச் சொல்லி விட்டுப் போகிறார்; அதில் நாம் என்ன கண்டு கொள்ள முடிகிறது?’ என்ற மாதிரியில் தமக் குத் தோன்றியபடி யெல்லாம் பேசி விடுவார்கள். அருமைப் பெருமக்களே! இப்படிப்பட்ட பயனில்லாத வார்த்தைகளில் உங்கள் எண்ணத்தைச் செலுத்தாதீர்கள். நாம் பிறர் சொல்லுவதைக் கேட்க, சிறிது நேரந்தான் காலம் கிடைக்கிறது என்றால், அந்தச் சிறிதளவாவது கேட்டுவிட்டுச் செல்லுங்கள். ஒருவர் சிறிதளவாகவும் சில செய்திகள்தான் - சில கருத்துக்களை மட்டும் கொஞ்சமாகத் தான் - சொல்லுகிறார் என்றாலும் அதை மட்டும் கேட்டு யாது பயன் என்பது போலப் போய் விடாதீர்கள். கொஞ்ச நேரமாக இருந்தாலும் சரி, அல்லது கொஞ்ச மாகவே செய்தியோ கருத்தோ இருந்தாலும் சரி அதையும் கேட்டு மகிழப் பழகுங்கள். நீர்த்துளி என்பது மிகச் சிறிய தென்றுதான் நாம் பேசினாலும், ஒடும் ஆறுகளும் மிகப் பெரிய நீர் நிலைகளும் எங்கிருந்து வந்தன என்பதை எண் னிப்பாருங்கள்! உங்களுக்கு உலக நீதியான பெருமை யின்னக் கூறுகின்றேன். நினைவில் நன்கு நிறுத்திக் கொள்ளு வீர்களாக. - எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். எனைத்தானும் - எவ்வளவு சிறிதேயானாலும், நல்லவை கேட்க - நல்ல உறுதிப் பொருள்களைக் கேட்டறிதல் வேண்டும், (அவ்வாறு கேட்டறிவது) அனைத்தானும் - அந்த அளவினாலும், ஆன்ற - நிறைந்த, பெருமை - பெருமையினை, தரும் - தருவதாகும். 7