உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

38 உங்கள் அறிவினையும் பயன்படுத்தி இதன் உண்மை யினை உணர்ந்து கொள்ளுங்கள். அறிவினை அறிந்து - பயன்படுத்தும் பழக்கம் இல்லாத மக்கள் மாக்கள் என்ற இழி நிலையில்தான் இருத்தல் வேண்டும். அறிவுடைய பெரு மக்களாக நீங்கள் இருக்கவேண்டு மென்பதே எனது பெரு விருப்பம். சொல்லுபவர்கள் யாராக இருப்பினும் சரி; அல்லது சொல்லப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து உண்மையினை உணர்ந்துகொள்ள முயற்சியுங்கள். எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் - எந்தவொரு பொருளை, யார் யார் - எவரெவர், வாய்க் கேட்பினும் - சொல்லக் கேட்டாலும், அப்பொருள் - அப்பொருளினுடைய, மெய்ப் பொருள் - உண்மையான பயனை, காண்பது அறிவு - காணும் வல்லமையுள்ளது அறி வாகும் . இதுதான் அறிவுடைய மக்களின் நல்லுரையாக, நல்வழி யாக இருத்தல் வேண்டும். உலக முன்னேற்றம் என்பது இந்தத் தன்மையில் இருப்பவர்களால்தான் முடியும், வாழ்க்கையில் ஒரு புதுமை அல்லது வாழ்க்கையின் குறிக்கோள் என்பது, அடுத்தபடியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். . 一大一