உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99

அருமை மக்களே! பிறப்பதும் இருப்பதும் இறப்பதுமா கப் பலர் வாழ்க்கையினைக் காணும் பொழுது வருந்துகின் றோம். இப்படிப்பட்ட வாழ்க்கை மனித வாழ்க்கை யாகுமா? பெறுதற்கு அரிய பிறவி யல்லவா இந்த மானிடப் பிறவி! பகுத்தறிவு இல்லாமல் - ஆறறிவு பெறாமல் விலங்கு களாகவும் அவைகட்குக் கீழ்ப்பட்ட பிறவிகளாகவும்இருந்து மறையும் உயிர்களைப் பற்றிக் கவலை வேண்டாம். மக்களாகப் பிறந்து மாண்புறு செயல் செய்து அழிந்து விடக்கூடிய இவ்வுடம்பை வைத்துக் கொண்டு அழியாத புகழடைய வேண்டிய ஆற்றல் இந்த மானிடப் பிறவிக்கு மட்டுந்தான் உண்டு என்பதை உள்ளத்தில் என்றென்றும் நிலை நிறுத்தி வாழுங்கள். மக்கள் கூட்டத்தில் நீயும் ஒருவனாகத் தோன்றி இருக்க வேண்டுமென்றால் நல்ல கல்வி - கேள்வி - அறிவு பெற்று ட ஈகை - பொதுத் தொண்டு முதலிய நற்பணிகளில் ஈடு படும் பெயர் பெற்று, நற்புகழ் கொண்ட வனாகவே இருக்க வேண்டும். அப்படிக்கில்லை யென்றால் நீ மனிதனாகத் தோன்றி மக்களிடையே இல்லாமல் இருத்தலே நன்று என்றும் உறுதி யாகச் சொல்லி விடுகிறேன். தோன்றின் புகழொடு தோன்றுக அன்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று. - தோன்றின் - மக்களாகப் பிறந்தால், புகழொடு - புகழடைவதற்கேற்ற குணங்களுடன், தோன்றுக - பிறத்தல் வேண்டும், அஃது - அவ்வாறு,