பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

I 00 இவார் - அத்தன்மை இல்லாதவர்கள், தோன்றலின் - மனிதராய்ப் பிறத்தலைவிட, தோன்றாமை நன்று - பிறவாதிருத்தலே நல்லதாகும். (விலங்காய்ப் பிறத்தல் நன்று.) இந்த உலக உண்மை உரை யொன்றினை நீங்கள் நினை வில் இறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஒரு குறிப்புத் தருகிறேன். என்ன கேள்வி அது என்று அறிய நீங்கள் ஆவல் கொள்வதும் இயற்கை தான். நான் ஏன் பிறந்தேன்? எனற கேள்விதான் அது. இந்தக் கேள்வியினைக் கேட்டுப் பார்த்தால் சரியான விடை உங்கட்குத் தெரியாமல் இருக்கலாம். ஏன் பிறந்தேன் என்றால் பிறந்தேன்’, 'பிறந்து விட்டேன்’ என்று ஏதோ அர்த்தமில்லாமல் பதில் சொல்லத் தான் உங்கட்குத் தோன் றும். இதோ தக்க பதில் கூறுகின்றேன். நன்கு கேட்டு நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடை வைத்திருப்பவன் நேர்மையான ஊதியத் தைக் கருதித்தான் வாணிபம் செய்ய வேண்டும். அதுதான் வாணிபத்தின் முறை. அதுவே போன்றுதான் இந்தஉலகம் என்னும் கடையில் நாம் எல்லோரும் வாணிபர்கள் போன்ற ←f fᎢᏯᎦᎧfᎢ . நமக்கு ஊதியம் - இந்த உயிருக்கு ஊதியம், இந்த மானி டப் பிறவியின் பயன் என்ன என்பதை அறிந்து அதனை அடைய நாம் முயற்சி செய்ய வேண்டாமா? நாம் எதனை ஊதியமாகக் கருதுதல் வேண்டும்? நல்ல கல்வி - கேள்வி - அறிவு - ஆற்றல் - செல்வம் பெற்றுப் பிறருக்கும் ஈந்து இசையோடு (புகழோடு) வாழ வேண்டும். அதுதான் பயன். ஏன் பிறந்தோம் என்பதற்கு இதுதான் தக்க பதில். இவ்வுண்மையினை ஒரு குறட்பா மூலம் உங்கட்குச் சொல்லுகிறேன், குறித்து வைத்துக்கொள் ளுங்கள்.