உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

I {} 1

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. ஈதல் - ஈகையினைச் செய்து, இசைபட - அதனால் புகழ் உண்டாக, வாழ்தல் - வாழ்தல் வேண்டும். அது - அத்தகைய புகழ், அல்லது - அல்லாமல், உயிர்க்கு - மக்களுயிர்க்கு, ஊதியம் இல்லை - பயனாக இருப்பது வேறு எதுவும் இல்லை. இம் மெய்யுரையினை உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் நோக்கம் இன்னதுதான் என்பதனை ஒருவாறு உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின் றேன்; இருக்கட்டும். வாழ்க்கையில் மற்றுமொரு உண்மை யினையும் இப்பொழுதே உங்கட்குச் சொல்லிவிட ஆசைப் படுகிறேன். நற்காரியங்களையும் - நல்ல எண்ணங்களால் உண்டா கும் முயற்சிகளையும் இன்றே இப்பொழுதே செய்ய ஆரம் பித்து விடுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளுவோம் என்று இருக்காதீர்கள். இந்த உலக வாழ்க்கையில் யார் எந்த இடத்தில் எந்த நேரத்தில் எந்த மாதிரியில் மறைந்துவிடு வார் - இறந்து விடுவார் என்று கூற முடியாது. தூக்கம் வருவது போல இறப்பும் வந்து சேர்ந்துவிடு கிறது. துரக்கம் - எந்த இடத்தில் - எப்பொழுது - எந்த நேரத்தில் வருகின்றது என்று சொல்ல முடியுமா? முடியா தல்லவா? அது போலத்தான் இறந்துபோவதும் என்று நினைவு வைத்துக் கொள்ளுங்கள். உறங்குவது போலும் சாக்காடு என்ற ஒரு சிறு குறிப்பு உங்கள் உள்ளத்தில் நன் றாகப் பதிந்திருக்கட்டும்! . . 一大一