VII ஆமை ஒட்டுக்குள் கால்களை மடக்கி வைத்திருக்கிறது. ஒரு ஆள் நிலத்தில் பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கிறான். ஒப்பனை செய்து அலங்காரமாக மண் உருவங்கள் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. குளத்தில் தாமரை இலையும் பூவும் நீர்க்குமேல் இருக்கும்படி தண்டுகளை நீட்டிக்கொண் டிருக்கிறது. செடியில் வாசனை இல்லாத மலர்களும் பூத் திருக்கின்றன. வணிகர் இனிப்பு பண்டங்களைத் தராசில் நிறுத்துக்கொடுத்து விற்கிறார். ஒருவன் வில்லை வளைத்து மரத்திலிருக்கும் பறவையை நோக்கி அம்பை விடுகிறான். ஒரு பெரியவர் களிமண் தரையில் வழுக்கி விழுகிறார். காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள. இக்குறட்பாவிற்கு விளக்கம் அண்ணன் தம்பிக்குச் சொல்வதாகவும், ஆசிரியர் மாணவர்க்குச் சொல்வதாகவும் இரண்டு இடத்தில் கூறித் திருக்குறளார் காக்கை எதையும் மறைத்து உண்ணாமல் தம் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும் நற்குணம் மக்களுக்குத் தேவை என் பதை வலியுறுத்துகிறார். மாணிக்கம், 'காக்கை-காகம் - என்று ஏன் ஐயா பெயர் வந்தது?’ என்று கேள்வி கேட்கிறான். பிறகு அவனே, காக்கை கரவா கரைந்துண்ணும் என்ற மூன்று வார்த்தைகளிலும் முதல் எழுத்தைச் சொல்விப் பார்த்தால் காகக என்று வருகிறது ஐயா!' என்று பதில் கூறுகிறான். இப்படிக் குறட்பாவில் உள்ள சொற்களை யெல்லாம் ஆராய்ந்து அதன் நயத்தை எடுத்துச் சொல்ல யாரால் முடியும் திருக்குறளார் நுணங்கு நுண்பனுவலின் நயத்தை நுகரக் கூடிய நுண்மாண் நுழை புலம் பெற்றவர். இந் நூல் ஒவ்வொருவர் வீட்டிலும், கல்விச்சாலை களிலும், நூலகங்களிலும் இருந்து என்றும் நிலைத்திருக்க வேண்டியது. க. சண்முகசுந்தரம்
பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/11
Appearance