VI ஆசிரியர் மாணவர்களுக்குத் திருக்குறள் கற்றுக்கொடுப்ப தாக இரண்டாவது நூலை இயற்றினர். யார் சொல்லியும் மக்கள் வள்ளுவர் காட்டிய வழியில் நடப்பதில்லை. வள்ளுவரே வந்து உலகப் பெருமக்களுக்கு அறவுரை கூறுவது போலக் கற்பனை செய்து மூன்றாம் நூலை இயற்றினார். அவர் நான்காவது நூலில் நான்கு கட்டுரைகளைக் கூறுகிரு.ர். அண்ணன் தம்பிக்குக் கதைச் சொல்வது போலச் சொல்லி இயற்கைக் காட்சிகளைக் கொண்ட திருக்குறட் பாக்களை நூலாசிரியர் விளக்குகிறார். அவர் ஆசிரியரும் மாணவரும் உரையாடல் போலச் சொல்வி நாடக பாணியில் இயற்கைக் காட்சிகளில் பொதிந்திருக்கும் குறட்பாக்களை விளக்குகிறார். இவை திருக்குறளார் கதாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் திகழக்கூடியவர் என்பதைக் காட்டு கின்றன. அவர் கிராமத்திலும் பூங்காவிலும் உள்ள காட் சிகளை அழகாக வர்ணித்துள்ளார். அவர் குறட்பாக் களைக் கற்பிக்கக் காட்டிய இயற்கைக் காட்சிகள்: கிராமத்தில் பிள்ளைகள் மாமரத்தில் கனியிருக்கக் காயைக் கவர்ந்து உண்கிறார்கள். ஒருவன் குளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். தூரத்திலிருக்கும் பெரிய மலை கண்ணைக் கவர்கிறது. இரண்டு ஆடுகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டு சற்று பின் வாங்கி வந்து பலமாகத் தலைகளை மோதிக்கொள்கின்றன. ஒரு காக்கை இரையைப் பார்த் ததும் கரைந்து தன் இனத்தை அழைத்து உண்ணுகிறது. கொக்கு உறங்குவது போல் இருந்து சட்டென்று மீனைக் குத்தி விழுங்குகிறது. ஊரார் ஆற்றில் மணலைத்தோண்டி நீர் எடுக்கிறார்கள். பூங்காவில் புல் முளைத் திருக்கிறது. ஓரிடத்தில் காக் கைகள் கூட்டமாகக் கூடி இரை உண்ணுகின்றன. குளத்தில்
பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/10
Appearance