பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

I 0.3

எண்ணும் எண்ணங்களை வெளியில் எடுத்துக்கூறும் ஆற்றல் பெறாத மக்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார் களல்லவா? அது மக்கள் கூட்டத்திற்கு ஒரு குறைபாடாகும். பலர் எண்ணிய எண்ணங்களை எடுத்துக்கூறும் ஆற்றல் பெற்றிருக்கின்றனர். ஆனால் செய்கையில் எடுத்துச்செய்யும் ஆற்றல் பெறாமல் இருக்கின்றனர். அதுவும் மற்றொரு வகையான குறைபாடு ஆகும். இவைகளை நன்கு ஆராய்ந்து பார்த்தால் எண்ணம் திண்ணியதாக இல்லை என்றே படுகின்ற தல்லவா? உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் தான் - தான், உள்ளியது - அடைய நினைத்த பொருளினை, எய்தல் - அடைதல், எளிதுமன் - எளிதானதாகும், மற்றும் - பின்னும், (அவன்) உள்ளியது - நினைத்த அப்பொருளினையே, உள்ள - நினைத்துக் கொண்டிருக்க, பெறின் - தன்மை பெற்றால். இப் பொன்னுரையின் சிறப்பினையும் உன்னிப்பாருங் கள்! நல்லறிவு பெற்ற மக்கள் உள்ளங்களில், இயற்கையில் நடத்தமுடியாத எண்ணங்கள் தோன்றவே தோன்றா. எனினும் செய்கையில் நடத்திக்காட்ட முடியவில்லையே என்றால், அதற்குக் காரணம் முயற்சியில்லாமையேயாகும். வெறும் பேச்சல்ல; உண்மையிலும் உண்மையாகும். 1 யாரும் எளிதாகப் பேசிவிடலாம்; ஆனால் செய்துகாட்