உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105

யிரண்டும் வேண்டியதை வேண்டியபொழுது அளிக்கும் சுரங் கங்களாகும். எங்கே மனிதன் இவைகளை நினைத்துப்பார்க்கின் றான்? ஆசைக்கு இரையாகின்றானே யன்றி அரிய குணங் களுக்கு இடமானான் இல்லையே! அந்தோ! ஒரு சில மக்களைப் பார்க்கும்பொழுது எனது உள்ளம் வருந்தி வருந்தித் துடிக்கின்றது. துன்பம் - கவலை - இடுக் கண் என்பவைகள் இன்னவை என்றும், மனித வாழ்க்கை இப்படிப்பட்டது என்றும் அறிந்துகொள்ளமுடியாத மக்கள் தமக்குத் தாமே வாழ்க்கையினைப் பாழ்படுத்தி வாழ்கின் றார்கள். - இன்பம் வந்தால் தலைகால் தெரியாமல் ஆடுவதும் நெஞ்சு வெடிக்கக் கதறுவதுமாக இருக்கின்றார்கள். துன்பம் என்பதே வராமல் இருக்கக்கூடாதா என்று எல்லோரும் நினைக்கத்தான் செய்கிறார்கள். பேதைகள்! எவ்வளவு தவறான எண்ணம். துன்பம் இருக்க முடியாத மனித வாழ்க்கையே இருக்க முடியாதே என்று அவர்களால் அறியமுடியவில்லை. துன்பம் என்பது வந்து விட்டால் வருவது இயற்கையான உண்மை யாகும். துன்பம் வந்தால் எப்படி அதனை எளிதில் நீக்கி இன்பம் அடைய முடியும் என்பதைத் தான் பழகிக்கொள்ள வேண்டும். ஆறு என்று இருந்துவிட்டால் தண்ணிர் வருவது இயற் கையே யாகும். தண்ணிர் வந்தால் ஆற்றினை எப்படிக் கடந்து செல்லுவது என்பதை எண்ணி அதற்கு வழிமுறை களை வகுத்துக்கொள்ள முயலவேண்டுமே அல்லாமல், ஆற்றில் தண்ணிரே வராமல் இருக்கக்கூடாதா என்று எண்ணிக்கொண்டிருத்தல் பேதைமையிலும் பேதைமை யன்றோ ! மனத்தினைப் பக்குவப்படுத்திக்கொள்ள அறியாத மக்களே, துன்பம்-கவலை என்று வந்தபொழுது தடுமாறித்