உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114 (6) நல்ல அரண் (கோட்டை) ஆகிய இந்த ஆறு வகை உறுப்புக்களையும் அரசியல் முறைகளையும் நினைவுபடுத் தவே குறளொன்று கூறிவைக்கின்றேன். படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படை - படையும், குடி - குடிமக்களும். கூழ் - பொருளும். அமைச்சு - அமைச்சும், நட்பு - நட்பும், அரண் - அரனும் (ஆகிய). ஆறும் உடையான் - ஆறு உறுப்புக்களையும் உடை யவன், - அரசருள் - அரசர்களுக்குள்ளே, ஏறு - ஆண் சிங்கம் போன்றவனாவான். நாடாளும் ஆட்சிக்கு ஒரு தலைவன் இருத்தல்வேண்டும் என்ற அவசியம், அந்த ஆட்சிமுறைக்கு அடிப்படையான ஆறு இன்றியமையாத உறுப்புக்களையும் கண்டுகொண் டோம். . மேலே கூறிய ஆறுவகைகளையும் விளக்கப்படுத்திக் கொண்டோமேயானால் அரசாட்சியின் உண்மைகள் விளங் யே தீரும். நாட்டின் நன்மைகளைப் பெரிதுபடுத்தி நல்வழியில் நற் காரியங்களைச் செய்துகொண்டே போய்க்கொண்டிருப் பது மட்டுந்தான் நல்லாட்சி முறைக்கு அறிகுறிகள் என்று எண்ணிவிடாதீர்கள். நிலத்தில் களை பறிப்பதுபோல் கொடிய வஞ்சகர்கள் கூட்டத்தினையும், அவர்களால் உண்