116
| 116 இக்குறட்பாவினை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இறைவன் என்று பேசப்படவேண்டிய நாட்டு மன்னன் நற்குணங்கள் அனைத்தும் வாய்க்கப்பெற்றிருத்தல் வேண்டு மல்லவா? வேண்டுதல் வேண்டாமை யிலான் என்னும் வாக்கு ஆதிபகவனாகிய இறைவனைக் குறிப்பதாகும்; விருப்பு வெறுப்பு இல்லாமல் இருப்பதே இறைத்தன்மைக்கு அறிகுறியாகும். அதுபோல குடிமக்களுக்கு இறைவனாகிய நாட்டுத் தலைவனும் எக்கருத்தினையும் எச்செயலையும் நன்கு ஆராய்ந்து ஒரவஞ்சனை இன்றி நடுநிலைமை கொண்டு இவர், அவர் என்கிற தனிப்பட்ட விருப்போ வெறுப்போ இல்லாமல் நடந்துகொள்ளுதல் வேண்டும். அத்தகைய இறைவனாகிய மன்னன் நீதி வழங்கும் முறைமைக்குக் குறள் ஒன்றினை நினைவில் கொள்ளுதல் வேண்டும். ஒர்ந்துகண் ஒடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. ஒர்ந்து - குற்றத்தினை யறிந்து, யார்மாட்டும் - யாவரிடத்தும், கண் ஓடாமல் - முகம் கொடாமல் (தாட்சண்ய மின்றி), இறை - நடுவு நிலைமை, புரிந்து - பொருந்துமாறு, தேர்ந்து-குற்றத்திற்குரிய தண்டனையை ஆராய்ந்து, செய்வஃதே - அந்த அளவில் செய்வதே, முறை - செங்கோன்மை என்பதாகும். இந்த அரிய உரையினை ஆளவேண்டிய துட்பமென்று தெரிந்துகொள்ளுங்கள். -