117
117.
ஆளுகின்ற தலைவன் தன்னுடன் தக்க பெரியார் களைத் துணையாகக் கொண்டிருத்தல் வேண்டும். பெரி யோரைத் துணைக்கொள்ளாத் தலைவன் என்றென்றும் நல்லாட்சி செய்தல் முடியாத தொன்றாகும். ஒருவன் செய்யவேண்டிய அருமையான காரியங்களுக் கெல்லாம் அருமையான காரியம் பெரியோர்களைப் போற்றிக் காத்து நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுதலே யாகும். அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். பெரியாரை - ஆற்றல் மிகுந்த பெரியோர்களை, பேணி - அவர் மகிழ்வனவற்றைச் செய்து, த்மராக் கொளல் - தமக்கு உற்றவராகக் கொள்ளுதல், அரியவற்றுள் - அருமையான பேறுகள், எல்லாம் - எல்லாவற்றுள்ளும், அரிதே - அரியதாகும் (சிறந்ததாகும்). இம் மெய்யுரையினைக் கண்போன்று காத்து வருதல் வேண்டும். மன்னனும் மக்களில் ஒருவனே ஆனபடியால் தவறு செய்தலும் இயல்பே யாகும். அரசனுக்குத் துணை யாக இருப்பவர்கள் தவறு கண்டபொழுது இடித்திடித்துக் கூறும் தன்மை உடையவர்களாக இருத்தல் வேண்டும். அரசனோடு கூடி மகிழ்ந்திருந்து காலம் கழிப்பவர்கள் துணையென்ற கருவிக்கு உரியவர்களாகார்கள். இடித் திடித்துக் கூறக்கூடிய துணைவர்களைப் பெற்றிருக்கும் நாட்டுத் தலைவனை எந்தப் பகைவனும் கெடுக்கவே முடியாது ,