உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118 இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர். இடிக்கும் - தீயன கண்டால் இடித்து நெருங்கிப் புத்தி சொல்லும், துணையாரை - துணையாய் நின்ற பெரியோர்களை, ஆள்வாரை - இவர் நமக்குச் சிறந்தவர் என்று கொள்ளுகின்ற அரசரை, கெடுக்கும் - கெடுக்கின்ற, தகைமையவர் - தன்மையுடைய பகைவர், யார் - யாரே உளர். இக்குறட்பா இவ்வுண்மையினைப் புலப்படுத்துகின்ற தல்லவா?