உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

119

அரசியல் முறைகளைப்பற்றி இதுகாறும் கூறிய சில பல உண்மைகளை மேலும் தொடர்ந்து விளக்கிவைக்க ஆசைப் ஆட்சிக்கொரு தலைவன், தலைவனுக்கு அறவழி காட்டும் அறிவு நிறைந்த அமைச்சர்கள், உற்ற துணையாக ஆட்சி செய்பவர்கட்கு அறவுரை வகுத்துக் காட்டி அவ்வப் பொழுது எடுத்துரைக்கும் பெரியார்கள், நல்ல நட்பு முறை கள், குடிமக்களின் ஒத்துழைப்பு ஆகிய இவைகளை ஒன்றாக வைத்துக்கொண்டு நடத்தப்படும் ஆட்சிதான் செம்மையான ஆட்சி என்று கூறப்படும். அறிவு நிறைந்த மக்களால்தான் ஆட்சி நடத்த முடியும் என்ற எளிய உண்மையினை நன்கு தெரிந்து கொண்டிருக் கின்ற உங்கட்கு அறிவு என்று கூறப்படும் ஆற்றலுக்குரிய செயல்களில் ஒன்றினை நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஆட்சி செய்யும் ஒவ்வொரு விநாடியும் மக்கள் மனப் போக்கு-உலக நடப்பு எப்படிச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதனையே நினைவில் வைத்துப்பார்த்து நடந்துகொள் ளுதல் வேண்டும். அறிவின் மேம்பாடு அப்பொழுதான் பாராட்டப்படும். உலகம் நடக்கின்ற போக்கில் நடப்ப வனே பேரறிஞன் என்று கருதப்படுவான். எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு உலகம் - உலகமானது, எவ்வது - எந்த முறையினால், உறைவது - நடந்து வருகின்றதோ, உலகத்தோடு - அவ்வாறு உலகத்துடன் பொருந்தி, அவ்வது - தானும் அந்த முறையினால், உறைவது அறிவு - நடந்து கொள்ளுவது அறிவுடைமையாகும்.