120
I 20 இம் முறையினை மேற்கொண்டு நடக்கக் கற்றுக்கொள் ளுங்கள். இன்றேல் அறிவு இருந்தும் எரியாத விளக்கு கையிலிருந்து பயன் என் என்பதுபோலத் தான் முடிந்துவிடும். அறிவின் அடிப்படையில் வைத்துத் தான் அமைச்சர்கள் செயல்களையும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அமைச் சர்களுக்கு - ஆட்சி செய்யும் முறைக்கு இருக்கவேண்டிய மிகமிக இன்றியமையாத ஆற்றல், எதனையும் முடிவாகச் சொல்லுதலும் செய்தலும் ஆகும் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். ஒருதலையாகச் சொல்லுதல் வேண்டும் என்பதாகும், அஃதாவது முடிந்த முடிபாகவும் உறுதியாகவும் சொல்லல் வேண்டும். ஒரு செயலில் ஒரு கட்டளையினை - ஆணை யினை (உத்தரவினை) சொல்லிச் செய்த பிறகு, இப்படிச் செய்தது தப்பு என்று பின்னர் மாற்றிக்கொள்ளும் நிலை யற்ற அறிவில் நடந்து கொள்ளுதல் ஆகாது. அப்படிப்பட்டவைகளை முன்கூட்டியே நினைத்துப் பார்த்துச் செய்தல் வேண்டும். இன்றேல் நாடு அமைச் சர்களைப் பார்த்து எள்ளி நகையாடும். தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. தெரிதலும் - யாவற்றையும் அறிந்து ஆராய்தலும், தேர்ந்து - தொழில் முடியும் வகையினை நாடி, செயலும் - செய்தலும், ஒருதலையா - முடிவாகவும் துணிவுண்டாகுமாறும், சொல்லலும் - சொல்வதிலும், வல்லது அமைச்சு - இவைகளில் வல்லவனே அமைச்ச னாவான்.