உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

147

சம்மதித்து, அந்தப் பணத்தை வாங்கிக் கடன் கொடுத்த வருக்குச் செலுத்தி விடுவானாம். ஒரு அடிமை நான்கு, ஐந்து பேர்களிடத்தில் எப்படியோ கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக்கொடுக்க இயலாமல் போனால், அவர்கள் இவனைப்பிடித்து நான்கு, ஐந்து துண்டுகளாக வெட்டி பங்குபோட்டு எறிந்து விடுவார்கள் என்றுகூட அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த ரோமன் தேசத்து சட்டப்புத்தகங்களில் காணப்படுகின்றன. இந்தச்செய்தியை ஒருவாறு நினைவுக்குக் கொண்டு வரும்பொழுது, அப்படிப்பட்ட அடிமைத் தனத்தில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தைத் தான் கயவர்' என்று அழைக்கின்றார் என்பதாகத் தோன்றுகிறது. ஆசிரியர் இங்கு கூறப்புகும் குணம் கயமைக்குணம் கொண்டவர் களிடத்தில் உள்ளவைகளில் ஒன்று. மானம், மரியாதை, உணர்ச்சி, தன்மதிப்பு என்பதெல் லாம் ஒன்றுமே, அவர்களிடத்தில் காண முடியாது. சுருக்க மாகப் பேசப்போனால் அவர்களை எந்தவகையிலும் மக்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ள லாயக்கற்றவர்கள். என்கிறார் ஆசிரியர் எற்றிற்கு உரியர் கயவர்' என்ற கேள்வியினை நிதானமாகக் கேட்கிறார். எந்தத் தொழில் செய்வதற்குத்தான் அவர்கள் தகுதி யானவர்கள் என்ற கேள்வியின் பொருளாழத்தைக் கொண்டுதான் இந்தச்சொற்களை அமைக்கின்றார். ஏன் இவ்வாறு கேட்கின்றார் என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஈனத்தனமான எண்ணங்கொண்ட அவர்கள் தமக்கு ஏதாயினும் துன்பம் வந்தால் அதனைச் சமாளிக்க அல்லது அதற்கு வேண்டிய பொருள்தேட முயற்சி செய் வோம் என்றுகூட எண்ணமாட்டார்களாம். சுலபமாகத் தம்மைக்கொண்டு போய் யாரிடமாவது அடிமையாக விற்றுவிடுவோமே என்று உடனே முடிவுசெய்து விடுவார்களாம். இது எவ்வளவு கேவலமான செய்கை