உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

146 கயவன் என்பவன் யார்? மனிதனாகப் பிறந்து இருக் கின்றானே அது ஒன்றைத் தவிர அவனிடத்தில் இருக்கும் குணங்கள் எல்லாமுமே மனித சமூகத்திற்கே ஒவ்வாத, தன் மானமிழந்த, கேவலச் செய்கைகளாகவே இருக்கும், பொதுவாக எல்லா மக்களுக்கும் இருக்கும் அவயவங்களும் அவனுக்கு இருப்பதினால்தான் அவனையும் மனிதன் என்று சொல்லவேண்டியிருக்கிறது. மற்றபடி மக்களுக்கு இருக்க வேண்டிய ஒரு நல்ல குணம்கூட அவனிடத்தில் இருக்கவே இருக்காதாம். அதுவும் அன்றி ஈனப்பழக்கங்கள் அத்தனைக்கும் அவனே இருப்பிடமாம். இதனால்தான் அவனைக் கயவன்' என்று பெயரிட்டு ஆசிரியர் அமைத்துள்ள பகுதியில் இவர்களின் குணங்களையும் செயல்களையும் அக்கு அக்காகப் பிரித்து அலசிப் பேசிவிடுகிறார். இந்த மானிடப் பிண்டங்களைப்பற்றி ஒவ்வொருவரும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டியதும் இன்றியமை யாத ஒன்றே யாகும். சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகில் ரோமாபுரி ராஜ்யம் பிரபல்ய மாக இருந்து வந்தது. நாகரிகம் பொங்கி வழிந்து கொண் டிருந்த தேசம் என்றும் சொல்லுகிறார்கள். அந்த நாட்டில் அப்பொழுது இருந்துவந்த கொடுமையான பழக்கத்தை இப்பொழுது நாம் கேட்டாலும் உள்ளம் நடுக்கமடைகின் நி0து. 'அடிமை என்கிற ஒரு பெயரை நிலையாகக்கொண்ட ஒரு மக்கள் கூட்டம் அங்கு இருந்து வந்தது. அவர்களை விற்கும் பொருளாகவும் வாங்கும் பொருளாகவும் அத் தேசத்து மக்கள் உபயோகித்து வந்தார்கள். ஒரு அடிமை யாரிடத்திலாவது கடன் வாங்கிவிட்டு அப்படி கடன் கொடுத்தவருக்குத் திருப்பிக்கொடுக்க வழியில்லாவிட்டால் தன்னைக்கொண்டுபோய் ஒரு செல்வந்தரிடத்தில் அடிமை யாக விற்று, அங்கேயே மிருகம் போல் வேலை செய்யச்