44
44 சுலபமான கேள்விதான்ே அண்ணா இது. அதிகம் தோண்டியவர்களுக்கு அதிகம் தண்ணீர் கிடைத்தது. கொஞ்சமாகத் தோண்டியவர்களுக்குக் கொஞ்சமாகக் கிடைத்தது. இது இயற்கைதானே அண்ணா! தம்பி! நீ இப்போது பள்ளிக்கூடத்தில் கல்வி கற்று வருகிறாய் அல்லவா? ஆம் அண்ணா!' "அந்தக் கல்வி உனக்குப் பெருகி அறிவு வளர்ந்து சிறந்து விளங்க வேண்டுமல்லவா? இப்போது இங்கு ஊற்று தோண்டினார்களே, அதுதான் உன்னுடைய கல்வியறி வைப் பெருக்கிக்கொள்ளுவதற்கு வழி காட்டுகிறது. அந்தக் குறட்பாதான் இப்போது சொல்லப்போகிறேன்.” சொல்லுங்கள் அண்ணா!' சொல்லுகிறேன் தம்பி! குறட்பா சொல்லுவதற்கு முன், அந்தக் குறட்பாவின் கருத்தைச் சொல்லுகிறேன், எழுதிக்கொள் தம்பி! மணலில் கிணற்றைத் தோண்டத் தோண்ட தண்ணிர் ஊறுகிறது. அதாவது, எவ்வளவு ஆழம் தோண்டப்படுகிறதோ, அவ்வளவுதான் நீர் ஊறி வருகிறது. அதுபோல, கற்கக் கற்கத்தான் அறிவு வளரும். எழுதிக்கொண்டாயா தம்பி!'
- எழுதிக்கொண்டேன் அண்ணா!' 'தம்பி, இன்னும் விளக்கம் சொல்லுகிறேன் கேள்! 'மணலில் கொஞ்சம் கிணறு தோண்டி நிறுத்திவிட் டால், தண்ணிரும் அந்த அளவுக்குத்தான் வரும். பிறகு வராது. அறிவும் கற்ற அளவுக்குத்தான் வரும். கொஞ்ச காலம் கற்று நிறுத்திவிட்டால், அறிவும் அந்த அளவுக்குத் தான் வளரும்.”
'நன்றாக விளங்குகிறது அண்ணா! குறட்பாவைச் சொல்லுங்கள், எழுதிக்கொள்ளுகிறேன்.' 'இதோ சொல்லுகிறேன் தம்பி, எழுதிக்கொள்.