உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43

கிறது? கொஞ்சமாகக் கிடைக்கிறது? கொஞ்சமாகவும் அதிகமாகவும் கிடைக்கக் காரணம் என்ன? இவைகளை யெல்லாம் நீ நன்றாகக் கவனித்துப் புரிந்துகொண்டாயா தம்பி!” என்ன அண்ணா! சாதாரணமாக விளையாட்டுப் போன்ற வேலை என்றுதான் நினைத்தேன். தாங்கள் எத்தனையோ ஆராய்ச்சிகளைச் செய்யச் சொல்லி வீட்டிர் களே அண்ணா ?” 'தம்பி! அதற்குள் மலைத்துவிடாதே. சாதாரண மானதுதான் இந்த வேலை. ஆனால் நான் உனக்குத் தெரி விக்கப் போகிறேனே, அதுதான் மிகப் பெரிய செய்தி! அதற்காகத்தான் சின்ன சின்ன வேலைகளையெல்லாம் பிரித்துக் காட்டிக் கேட்டேன்.” ஒன்று நன்றாகத் தெரிந்துகொண்டேன் அண்ணா!' என்ன தம்பி அது? 'மணலைத் தோண்டினால் தண்ணிர் கிடைக்கும் என்ற உண்மையை நன்றாகத் தெரிந்துகொண்டேன் அண்ணா!' "அது ஒரு பெரிய உண்மை தம்பி! தெரிந்துகொண்டது நல்லதுதான். ஆனால் தண்ணிர் எப்படி வருகின்றது என்று தெரிந்துகொண்டாயா? 'தண்ணிர் வருவதைத் தெரிந்துகொண்டேன் அண்ணா! ஆனால் எப்படி எங்கிருந்து வருகிறது என்று குறிப்பிட்டுக் கண்டுகொள்ள முடியவில்லையே அண்ணா! அடியிலிருந்தும் வருகிறது. பக்கங்களிலிருந்தும் வருகிறது. இப்படித்தான் சொல்ல முடிகிறது.” . அவ்வளவுதான் தம்பி தெரிந்துகொள்ள முடியும். அதுவே போதும். இன்னொரு கேள்வி கேட்கிறேன். சொல், பார்ப்போம். சிலருக்கு நிறைய தண்ணிர் கிடைத் தது. சிலருக்குக் கொஞ்சம்தான் கிடைத்தது. காரணம் தெரிந்ததா தம்பி!' -