பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42 தெரிகிறதே அண்ணா! பாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொம்புகள், குடங்கள் எல்லாம் வைத்திருக்கிறார்களே!’ தண்ணிர் எடுத்துப் போக வந்திருக்கிறார்கள். அதற் குத் தான் குடங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.” என்ன அண்ணா இது? அங்கு மணல்தானே இருக் கின்றது. குடத்தில் நிறைக்கத் தண்ணிர் எப்படிக் கிடைக்கும்?" 'தண்ணிரா கிடைக்காது தம்பி! நிறைய கிடைக்கும். முதலில் அங்கேயே போவோம் வா. அங்குதான் உனக்கு நல்ல செய்தியைத் தெரிவிக்கப்போகிறேன். அங்கே போய்ப் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டே இருப்போம் பாருங்கள் அண்ணா! அதற்குள் இந்தப் பையன் குடத்தில் தண்ணிரை நிரப்பிக்கொண்டு புறப்பட்டுவிட் டான் .' அவன் அதிகமாக மணலைத்தோண்டினான். தண்ணிர் நிறைய கிடைத்துவிட்டது. நிரப்பிக்கொண்டு போகிறான்." எல்லோரும் அப்படியே செய்கிறார்கள் அண்ணா!' ஊற்று நீர் மிகவும் நல்லது தம்பி! இந்த நீர் கிடைப் பதும் எளிதாக இருக்கின்றதல்லவா? இங்கே ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன் என் lர்களே அண்ணா!' சொல்லுகிறேன் தம்பி! நீ இன்னும் நன்றாகப் பார்த்துக்கொண்டே இரு. அப்போதுதான் நான் சொல்லப் போகிற செய்தி தெளிவாக விளங்கும். எப்படி மணலைப் பறிக்கிறார்கள்? எவ்வளவு ஆழம் பறிக்கிறார்கள்? மணலை எடுக்க எடுக்க தண்ணீர் எப்படி வந்துகொண்டே இருக் கிறது? எவ்வளவு ஆழம் தோண்டுகிறார்கள்? எவ்வளவு தண்ணிர் வருகிறது? எல்லோருமா, ஒரே மாதிரி பள்ளம் தோண்டுகிறார்கள்? யாருக்கு அதிகம் தண்ணிர் கிடைக்